28 September 2013 11:58 pm
இலங்கை வடக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட தேர்தல் இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டமாகும் என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கூறினார். இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தியது இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டமாகும்.13-வது சட்டத் திருத்தத்தை தமிழர்கள் ஏற்காத சூழலில், அச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக ராஜபட்சே அரசு களம் இறங்கியுள்ளது. இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களை காக்க தவறிய பாங்கிமூன் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. இலங்கை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். காமன்வெல்த் நம்பகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டுமெனில் அந்த மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்றார் வைகோ.