ஈரான் ஒப்பந்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு - தமிழ் இலெமுரியா

25 November 2013 11:16 pm

ஈரான் ,ஆறு உலக நாடுகளுடன் எட்டிய அணு சக்தி ஒப்பந்தத்தை அடுத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் பேரலுக்கு இரண்டு டாலர்களுக்கும் மேல் வீழ்ந்துள்ளன. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் ஒரு பகுதி தளர்த்தப்படும் என்று அந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு இரான் கணிசமான அளவுக்கு அதன் எண்ணெய் விற்பனையை அதிகரிக்க அனுமதிக்கப்படாது என்றாலும், இந்த ஒப்பந்தம் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பிரதேசமான மத்தியக் கிழக்கில் பதற்றங்களை தளர்த்தியிருக்கிறது என்று நோக்கர்கள் கூறுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் மீதான கடுமையான தடைகள் அதன் எண்ணெய் ஏற்றுமதிகளை கடுமையாக கட்டுப்படுத்தியிருந்தன.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி