ஈரான் மீண்டும் வெற்றிகரமாக விண்வெளிக்கு குரங்கை அனுப்பியது! - தமிழ் இலெமுரியா

15 December 2013 10:24 pm

ஈரான் இரண்டாவது தடவையாகவும் குரங்கு ஒன்றை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்தின் ஓர் அங்கமாகவே ஈரான் இந்தக் குரங்கை அனுப்பி வைத்துள்ளது. ஃபர்ஹாம் என்று பெயரிடப்பட்ட குரங்கு, விண்வெளிக்குச் சென்று முழுமையான உடல்நலத்துடன் மீண்டும் திரும்பியிருப்பதாக ஈரான் அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானி கூறியுள்ளார். திரவநிலை எரிபொருளைப் பயன்படுத்தும் ராக்கெட் மூலமாக அந்தக் குரங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஈரான் இந்த திரவநிலை எரிபொருள் ராக்கெட் தொழில் நுட்பத்தை முதல் தடவையாக பயன்படுத்தியுள்ளது. ஈரானின் விண்வெளித் திட்டம் மேற்குலக நாடுகள் மத்தியில் கவலைகளை அதிகரித்துள்ளது. ஈரான் இந்தத் தொழில் நுட்பத்தை ஏவுகணை தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தக் கூடுமென்று அந்த நாடுகள் அஞ்சுகின்றன.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி