உத்தரப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலி - தமிழ் இலெமுரியா

19 July 2016 4:57 pm

வீட்டில் தயாரித்த மதுவை குடித்து 17 தொழிலாளிகள் இறந்துள்ளதாக இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.இறந்தோர் அனைவரும் வெள்ளிக்கிழமை இரவு கள்ளச்சாராயத்தை குடித்தனர். உள்ளூர் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். பல அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.விசச் சாரயம், வீட்டில் தயாரித்த கள்ளச்சாராயம் ஆகியவற்றை குடித்து, உயிரிழப்புகள் ஏற்படுவது இந்தியாவின் கிராமப் பகுதிகளில் பொதுவாக நிகழ்கிறது.உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்திருக்கும் பிகார் மாநிலம் அனைத்து விதமான மது விற்பனைக்கும் சமீபத்தில் தடை விதித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், மது அதிகம் அருந்துவதை நிறுத்தும், வன்முறையை கட்டுப்படுத்தும் என்று மதுவை தடை செய்வதற்கு ஆதரவளிப்போர் கூறுகின்றனர்.இதற்கு எதிரான கருத்துடையோர் இத்தகைய நடவடிக்கை தரம் குறைந்த சட்டப்பூர்வமற்ற சாராய உற்பத்தியை ஊக்குவிக்கும் என்கிறர்கள்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி