உலகக் கோப்பை கால்பந்து: நடப்புச் சாம்பியன் ஸ்பெயின் வெளியேறியது - தமிழ் இலெமுரியா

19 June 2014 12:53 am

நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஸ்பெயின் இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளது. தென் அமெரிக்க நாடான சிலிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின் 2-0 தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் சிலி அணியின் எட்வார்டோ வகார்ஸ் 19 ஆவது நிமிடத்திலும், சார்லஸ் அராங்குயே 43 ஆவது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர். சிலி அணியின் உத்திகள் மற்றும் தாக்குதலை ஸ்பெயினால் சமாளிக்க முடியவில்லை. உலகக் கோப்பை போட்டியில் நடப்புச் சாம்பியன் ஸ்பெயின் தொடர்ச்சியாக இரு போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளமை ரசிகர்களிடையே பெரும் அதிர்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி