உலகின் இருபெரும் போட்டி மருந்து நிறுவனங்கள் இணைகின்றன - தமிழ் இலெமுரியா

24 November 2015 10:00 am

மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்க பெருநிறுவனமான ஃபைசர், தனது போட்டியாளரான ஐரிஷ் நிறுவனமான அலெர்கானுடன் இணையும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சுமார் 160 பில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்தது. இதையடுத்து இணைந்த இந்த நிறுவனமே உலகின் மிகபெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனமாக இருக்கும். எனினும் இந்த நடவடிக்கையானது, ஃபைசர் நிறுவனம் வரியை மிச்சப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கும் ஒரு நகர்வாகவே இருக்கும் என தொழில்துறை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த இரு நிறுவனங்களும் இணைந்த பிறகு அதன் தலைமையகம் ஐரிஷ் தலைநகர் டப்ளினுக்கு மாறும். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு அதன் மொத்த மதிப்பு 300 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என செய்தியாளர்கள் கூறுகிறார்கள். இணைந்த நிறுவனத்தின் பெயர் அலெர்கான் பிஎல்சி என்று இருக்கும். பின்னர் அது ஃபைசர் பிஎல் சி என பெயர் மாற்றம் செய்யப்படும். சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றி இளமையாகத் தோற்றமளிக்க உதவும் மருந்துகளை அலர்கான் நிறுவனம் தயாரிக்கிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி