16 April 2017 5:45 pm
நார்வேயின் ஸ்டட் தீபகர்ப்ப கடற்பகுதி கொந்தளிப்பான வானிலைக்கும் ராட்சச அலைகளுக்கும் பேர் போனது. இந்த பகுதியில் கப்பல்களின் பயண நேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம் ஒன்று தயாராகியுள்ளது. கடும்பாறைகளாலான இந்த தீபகற்பத்திற்கு உள்ளே அடியாழத்தில் "உலகின் முதல் கப்பல் சுரங்கம்" உருவாக்கப்படவிருக்கிறது. ஆழ்கடலிலிருந்து விலகி, அமைதியான இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கம் குடையப்படுகிறது.இந்த கப்பல் சுரங்கம் வழியாக 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும். உலக அளவில் கப்பல்கள் செல்ல பிரம்மாண்ட கால்வாய்கள் இதற்கு முன்பு வெட்டப்பட்டிருந்தாலும், கப்பல்கள் செல்லக்கூடிய சுரங்கம் அமைக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்கிறது நார்வே.இந்த சுரங்கத்திற்காக சுமார் எண்பது லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்த்து எடுக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டுக்குள் இந்த சுரங்கத்தை வெட்டி முடிக்க முடியுமென நார்வே நம்புகிறது.