எரிமலை வெடிப்பு காரணமாக சப்பான் கடலில் புதிய தீவு! - தமிழ் இலெமுரியா

4 December 2013 12:18 am

சப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு தென் பகுதியிலுள்ள கடற்பரப்பில் எரிமலை வெடிப்பு காரணமாக புதிய தீவொன்று உருவாகியுள்ளதாக அந்நாட்டின் கரையோர காவலர்களும் புவியியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். 200 மீட்டர் விட்டமுடையதாகவுள்ள இந்தத் தீவு,  மனிதர்களின் நடமாட்டமற்ற  போனின் தீவுகள் என அழைக்கப்படும் ஒகசவாரா தீவுத் தொடரின் அருகில் நிஷி நோஷிமா கடற்கரையை அண்டிய பகுதியில் உருவாகியுள்ளதாக ஜப்பானின் பூகோளவியல் மையம் தெரிவித்துள்ளது.   டோக்கியோவின் தென் பகுதியிலிருந்து 1000 கிலோ மீட்டர் இடைவெளியில் சுமார் 30 தீவுகள் காணப்படுகின்றன. எரிமலைகள் தொடர்ந்து கக்கும் தீக்குழம்புகள் படிந்தே இத்தீவு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் நிபுணர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே இதுபோன்ற எரிமலை வெடிப்பின் விளைவாக பாகிஸ்தானிற்கு அருகிலும் அண்மையில் இரு குட்டித் தீவுகள் உருவாகின. நாளடைவில் இத்தீவுகள் தானாவே மறைந்துவிடும் அல்லது அப்படியே இறுகி விடுமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.  வியாழக்கிழமை அத்தீவிலிருந்து பாரிய கரும்புகைகள் வெளியேறிக் கொண்டிருக்கும் காட்சியை அந்நாட்டு ஊடகங்கள் காண்பித்திருந்தன. 

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி