எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்ல அதிகாரம் இருக்கிறதாம்: ரணில் மீண்டும் கொக்கரிப்பு!! - தமிழ் இலெமுரியா

17 March 2015 4:34 pm

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்ல தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த தந்தி தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த பேட்டியில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுட்டுக் கொல்வோம் என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது இலங்கைக்கு சென்றிருந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் ரணிலை சந்தித்து தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். பின்னர் ராஜ்யசபாவில் இது தொடர்பான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், ரணில் விக்கிரமசிங்கேவின் பேட்டி குறித்து இந்தியாவின் கவலையைத் தெரிவித்தேன்..அதற்கு ரணில் வருத்தம் தெரிவித்தார் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கைக்கு 3 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில் என்.டி.டி.வி. ஆங்கில சேனலுக்குப் பேட்டியளித்திருக்கும் ரணில், தமிழக மீனவர்களை சுட்டு கொலை செய்ய தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று ஆணவத்துடன் மீண்டும் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கேவின் இந்த பேட்டி தமிழக மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி