ககாமி அதிபராக நீடிப்பது பற்றி ருவாண்டாவில் கருத்தறியும் வாக்கெடுப்பு - தமிழ் இலெமுரியா

19 December 2015 10:33 am

ருவாண்டாவில் தற்போதைய அதிபர் பால் ககாமி இரண்டாயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டு வரையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை அனுமதிக்கும் விதமான அரசியல் சாசன மாற்றம் பற்றி அந்நாட்டின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை வாக்களிக்கின்றனர். இந்த மாற்றத்துக்கு மக்களின் ஒப்புதல் கிடைக்குமானால் வரும் 2017ஆம் ஆண்டில் ககாமி மூன்றாவது முறையாக ஒரு ஏழு ஆண்டு ஆட்சிக்காலத்துக்கு ககாமி போட்டியிட அனுமதி கிடைக்கும். 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையை கட்டுப்படுத்தியதில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ககாமிக்கு பெரிய பங்கு உண்டு. பதவியில் தொற்றிக்கொண்டிருக்காமல் மற்றவர்களுக்கான ஒரு உதாரணமாக ககாமி திகழ வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மக்களின் விருப்பம் என்ன என்பதன் அடிப்படையிலேயே அடுத்த தேர்தலில் தான் நிற்பதா வேண்டாமா என்பதை முடிவுசெய்வேனென ககாமி தெரிவித்துள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி