கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது – இலங்கை அரசு திட்டவட்டம் - தமிழ் இலெமுரியா

24 August 2013 12:19 am

கச்சத்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜித சேனரத்னே தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆண்டுக்கு 70 நாட்கள் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ள இலங்கை மீனவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். ஆனால் இலங்கை அரசோ இதனை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், சர்வதேச கடல் எல்லை கோட்பாட்டை தமிழக அரசோ தமிழக மீனவர்களோ மீற முடியாது. கச்சத்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களை அனுமதித்தால் அது இலங்கையின் வடக்கு பகுதி மீனவர்களுக்கு இழைக்கும் அநீதி என்றும் அவர் தெரிவித்துள்ஒளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி