கடும் எதிர்ப்புக்கிடையே ஹாங்காங்கின் முதல் பெண் தலைவர் தேர்ந்தெடுப்பு - தமிழ் இலெமுரியா

26 March 2017 2:08 pm

ஹாங்காங்கின் புதிய தலைவராகவும், அப்பகுதியின் முதல் பெண் தலைவராகவும் கேரி லாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சீனாவின் ஆதரவு இருந்ததால் கேரி லாம் வெற்றி பெறுவார் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிலாக, ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி, சீன ஆதரவு வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வாக்கெடுப்பு நடந்த மையத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஜனநாயக ஆதரவு குழுக்கள், இத்தேர்தல் முறையை வெட்கக்கேடானது என்று வர்ணித்துள்ளனர். ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஜனநாயக ஆதரவு குழுக்கள்லாமின் பிரதான எதிர்தரப்பு வேட்பாளரான முன்னாள் நிதித்துறை தலைவர் ஜான் சாங், மக்களின் ஆதரவினை பெற்ற வேட்பாளராக இருந்ததாக கருத்துக்கணிப்புகள் முன்னர் தெரிவித்திருந்தன.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி