கர்நாடக முதல்வரின் தலையை துண்டிப்பதாக கூறிய பாஜக தலைவர் கைது - தமிழ் இலெமுரியா

4 November 2015 10:15 am

மாட்டிறைச்சி உணவுக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் தலை துண்டிக்கப்படும் என பேசிய பாஜக தலைவர் எஸ்.என்.சென்னபாசப்பா கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா நகராட்சியின் முன்னாள் தலைவரான, சென்னபாசப்பா மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153, 353 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னபாசப்பாவின் கருத்தை பாஜக ஏற்கவில்லை என்று கட்சியின் மாநிலப்பிரிவு கூறியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பேச்சுக்களை தவிர்க்க கட்சியினருக்கு அறிவுரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மாட்டிறைச்சியை உண்பது குறித்த சர்ச்சைகள் வலுத்துவரும் நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தான் இது வரை மாட்டிறைச்சி உணவு உண்டது இல்லையென்றாலும், மத்திய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக தானும் மாட்டிறைச்சி உணவை உண்ணப் போவதாக குறிப்பிட்டார். இதற்கு எதிப்புத் தெரிவித்த சென்னபாசப்பா முதல்வர் ஷிமோகாப் பகுதிக்கு வந்து மாட்டிறைச்சி உணவை உண்டால், அவரது தலை துண்டிக்கப்படும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்தே அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி