கர்ப்பிணிகள் இறப்பு எண்ணிக்கை குறைகிறது – ஐநா ஆய்வு - தமிழ் இலெமுரியா

13 November 2015 10:30 am

கர்ப்பம் தொடர்பான காரணங்களால் பெண்கள் இறக்கும் எண்ணிக்கை 1990லிருந்து ஏறக்குறைய பாதியாகக் குறைந்துவிட்டது என்று ஐநாவும் உலக வங்கியும் கூறுகின்றன. ஆனால் ஐநாவின் புத்தாயிர வளர்ச்சி இலக்குகளின் ஒரு பகுதியாக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை ஒன்பது நாடுகள் மட்டுமே எட்டியுள்ளன என்று இந்த இரு அமைப்புகளால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த ஆண்டு இறுதி வாக்கில், உலகமெங்கும் கர்ப்பகால இறப்புகள் விகிதம் 1990லிருந்த எண்ணிக்கையிலிருந்து சுமார் 44 சதவீத அளவில் குறைந்திருக்கும் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.ஆனால் இந்த வெற்றி என்பது ஒரு சமமற்ற நிலையை மறைக்கிறது. புத்தாயிர வளர்ச்சி இலக்குகளின் ஒரு பகுதியாக இந்த கர்ப்ப கால இறப்பு விகிதங்களை 75 சதவீத அளவில் வெட்ட ஐநா மன்ற உறுப்பு நாடுகள் உறுதியளித்திருந்தன. ஆனால் அந்த இலக்கை ஒன்பது நாடுகளே எட்டியிருக்கின்றன. வேறு 13 நாடுகளில் நிலைமை மோசமாகியுள்ளது. 39 நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கின்றன. அமெரிக்காவில் பெண்கள் கர்ப்பகாலத்தில் இறக்கும் விகிதம் கனடாவை விட இரண்டு மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. சஹாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகளில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும், உலகெங்கும் நடக்கும் மூன்று இறப்புகளில் இரண்டு அப்பகுதியில்தான் நடக்கின்றன. நல்ல தரமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே இந்த இலக்கை எட்ட முடியும் என்று ஐநா கூறுகிறது. இறப்புகளில் 99 சதவீதம் வளர்ந்து வரும் நாடுகளில்தான் நடப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் டாக்டர் லேல் சேய் கூறுகிறார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி