காய்ச்சல் காரணமாக அப்துல்கலாம் மருத்துவமனையில் அனுமதி - தமிழ் இலெமுரியா

16 November 2013 11:18 pm

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 82 வயதாகும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆவார். இவர் தற்போது டெல்லி ராஜாஜி மார்க்கில் குடியிருக்கிறார். இந்நிலையில், காய்ச்சலால் சோர்வடைந்து காணப்பட்ட அவரை, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இது தொடர்காக அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘சில வாரங்களாக அதிக சுற்றுப்பயணம் செய்ததால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய மருத்துவர்கள், முழுமையாக ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அவரது இதய துடிப்பு, இரத்த கொதிப்பு போன்றவை சீராகவே உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பி விடுவார்’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி