காஷ்மீர் பிரச்சினையில் சர்வதேச தலையீடு கோரும் பிரிவினைவாத தலைவர்கள் - தமிழ் இலெமுரியா

19 July 2016 4:48 pm

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் அமலில் உள்ள கடுமையான ஊரடங்கு உத்தரவு மற்றும் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு அமைதி திரும்ப, சர்வதேச மேற்பார்வையி்ல் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அங்குள்ள பிரிவினைவாதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலக அளவிலான பல்வேறு அமைப்புகள் மற்றும் பன்னாட்டுத் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தில், நான்கு அம்ச அமைதி கோரிக்கைகளை மூத்த பிரிவினைவாத தலைவர் சையது அலி கிலானி முன்வைத்துள்ளார். காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்ப, இந்திய அரசு இந்த நான்கு கோரிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதையும், வாழும் மக்களின் சுய நிர்ணய உரிமையையும் இந்தியா ஒப்புக் கொள்ள வேண்டும்.மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் ராணுவம் அகற்றப்பட்டு, தவறு செய்யும் படையினரை சட்டத்திலிருந்து பாதுகாக்கும் ராணுவ சட்டத்தை முடிவுக்கு கொண்டுவர  வேண்டும்.அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். வீட்டில் சிறை வைக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு அரசியல் வாய்ப்பு வழங்க உறுதி செய்யப்பட வேண்டும்.ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையாளர்களையும், உலக மனித உரிமைகள் அமைப்புகளை சேர்ந்த கண்காணிப்பாளர்களையும் காஷ்மீருக்குள் அனுமதிக்க வேண்டும், என்ற நான்கு கோரிக்கைகளையும் தன்னுடைய கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார் கிலானி.தனது முன்னாள் எதிரிகளான மீர்வாயிஸ் உமர், யாசின் மாலிக் ஆகியோரின் ஆதரவை தற்போது பெற்றுள்ள கிலானி, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில், ஐரோப்பிய ஒன்றியம், சார்க், ஆசியான், இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களுக்கும், பாகிஸ்தான், இரான், துருக்கி, சவுதி அரேபியா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி