8 October 2013 8:24 am
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முழு அளவிலான உற்பத்தியை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கவே இல்லை. அணு மின் நிலையத்தில் உள்ள சில பாகங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. மாற்று பாகாங்கள் வெளியிலிருந்து வாங்க முடியாது. ரஷ்ய நாட்டு ஒப்பந்தத்தின் படி அவர்கள் தான் வழங்க வேண்டும். இதில் ஏற்படும் கால தாமதத்தினால் தான் மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.