18 November 2016 5:41 pm
கொதி நிலையில் இருந்த அமிலதன்மை மிக்க ஒரு வெப்பக் குளத்தில் ஒரு நபர் விழுந்து இறந்த சம்பவத்துக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள யெல்லோ ஸ்டோன் தேசிய இயற்கை பூங்காவின் அதிகாரிகள், பூங்காவில் உள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு பூங்காவுக்கு வருபவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.காலின் ஸ்காட் என்ற அந்த நபரின் உடலை மீட்பு குழுக்கள் மீட்கும் முன்னர் அவரது உடல் வெப்பக் குளத்தில் கரைந்து விட்டது. வெப்பக் குளத்தின் வெப்ப நிலையை சோதிக்க காலின் ஸ்காட் சற்று குனிந்து முயற்சிக்கையில், அவர் இந்த குளத்தில் தவறி விழுந்துள்ளார்.இந்த சம்பவத்தை அவரது சகோதரி தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். அதிபயங்கரமான இந்த சம்பவம் குறித்த தகவல்கள் ஒரு உள்ளூர் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தினால் விபரங்கள் கூறியதால் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.