11 September 2016 5:49 pm
மேற்கொள்ளப்பட இருக்கும் அணு குண்டு தாக்குதலை குறிப்புணர்த்தி வட கொரியாவின் தலைநகரை முழுமையாக அழித்து விடுகின்ற திட்டம் ஒன்றை தென் கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தியிருப்பதால், கொரிய தீபகற்பத்தில் விவாதங்கள் அதிகரித்துள்ளன.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த திட்டத்தின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள யான் ஹப் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.கண்டம் விட்டு கண்டம் பாயும் வழக்கமான ஏவுகணைகள் மூலமும், கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஷெல் குண்டுகள் மூலமும் பியாங்யாங்கிலுள்ள அனைத்து மாவட்டங்களும் அழிக்கப்படுவதை இந்த திட்டம் விவரிக்கிறது. வட கொரியா இதுவரை நடத்தியுள்ள அணுகுண்டு சோதனைகளில் மிகவும் சக்தியானதாக கருதப்படும் சோதனை நடந்த இரண்டு நாள்களுக்கு பிறகு இந்த திட்டம் வெளியாகியுள்ளது.அணு ஆயுதங்களை செய்வதில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை வட கொரியாவின் சமீபத்திய அணுகுண்டு சோதனை ஏற்படுத்தியிருக்கிறது.