8 September 2013 7:46 am
இந்தியாவின் ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சில கோயில் நிருவாகங்களிடம் உள்ள தங்க கையிருப்பு குறித்த கணக்கைக் கேட்டுள்ளது.கோயில்களில் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதை அறிவதே ரிசர்வ் வங்கியின் நோக்கம் என்றும், தங்கத்தை வாங்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி தெரிவித்தார். ரிசர்வ் வங்கியிடமிருந்து தங்க கையிருப்பு பற்றிய கடிதம் வந்துள்ளதாக கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோயில் நிருவாகம் உறுதிப்படுத்தியுள்ளது. திருப்பதி கோயில் நிர்வாகத்திடமும் தங்கக் கணக்கு கேட்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் ஏராளமான தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.கோயில்களில் நூற்றுக்கணக்கான டன் தங்கம் இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதற்கு தங்க இறக்குமதியே முக்கியக் காரணம் எனக் கூறப்படும் நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.