சம்பள பாக்கியை தங்கமாகக் கொடுத்த நிறுவனம்; புலம்பும் தொழிலாளர்கள் - தமிழ் இலெமுரியா

12 October 2015 12:44 pm

செர்பியாவில் தங்கத் தயாரிப்புத் தொழில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் ஒன்று, அதன் ஊழியர்களுக்கு தான் செலுத்த வேண்டியிருந்த 5 மாத சம்பள பாக்கியை தங்கத்தைக் கொண்டே தீர்த்துள்ளது.  ஸிலாடாரா மஜ்டன்பேர்க் என்ற அந்த நிறுவனம் தனது 315 ஊழியர்களுக்கும் தலா 30 கிராம் வீதம் கொடுத்துள்ளது. 1970 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த அந்த நிறுவனம், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகிறது. தற்போது அந்த நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த மாதம் 14 ஆம் திகதி குறித்த நிறுவனம் தனியார்மயப்படுத்தப்பட உள்ள நிலையில், அந்த செயற்பாடு தோல்வியடைந்தால் குறித்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் சட்டரீதியாக திவாலாகும் நடைமுறையை எதிர்கொள்ளும் சாத்தியமுள்ளது. இவ்வாறானதொரு சூழலில் ஊழியர்கள் புதிய வேலைவாய்ப்பைப் பெறும் வரை, தாம் தங்கத்தில் வழங்கிய கொடுப்பனவு அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதனிடையே, உலக சந்தையில் தங்கத்தின் விலை சீராக உயர்வடைந்துள்ள நிலையில், தமது கிடைத்துள்ள சம்பளத்தின் பெறுமதி மிகவும் குறைந்து விட்டதாக தொழிலாளர்கள் புலம்புகின்றனர். கடந்த ஐந்து மாதங்களின் சம்பள நிலுவைக்காக நிறுவனம் தனக்கு 31 கிராம் தங்கமும், தனது கணவருக்கு 36.5 கிராம் தங்கமும் கிடைத்ததாகவும் அதில் பெருந்தொகை தண்ணீர் மற்றும் எரிவாயு கட்டணங்களை செலுத்துவதற்கு மட்டுமே போதுமாயிருக்கும் என்று ஊழியர் ஒருவர் கூறினார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி