சர்ச்சையைக் கிளறியுள்ள சந்திரசேகர ராவ்வின் யாகம் - தமிழ் இலெமுரியா

28 December 2015 10:07 am

மக்கள் நலனுக்கான பிரார்த்தனை என்று கூறி தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தியிருப்பது தொடர்பில் சர்ச்சைகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன. இரண்டாயிரத்துக்கும் அதிகமான புரோகிதர்கள் பங்கேற்க கடந்த ஐந்து நாட்களாக இந்த ஆயுத சண்டி மஹா யாகம் நடத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த யாகத்தில் கலந்துகொண்டுள்ளனர். தவிர நாட்டின் முக்கியத் தலைவர்களும் பிரமுகர்களும்கூட பல்வேறு கட்டங்களில் இந்த யாகத்தில் பங்கேற்றுள்ளனர்.தீ தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மேடக் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் யாகம் நடத்திவந்த பந்தலின் ஒரு பாகம் 27-12-2015 அன்று தீப்பிடித்து எரிந்துவிட்டது.இச்சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாக தகவல்கள் இல்லை.சர்ச்சை அதேநேரம் அரசு பொறுப்பிலுள்ள முதலமைச்சர் ஒருவர் பெரிய அளவில் யாகம் நடத்துவது இந்திய அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. தெலங்கான முதலமைச்சர் யாகம் நடத்தியிருப்பது மற்ற அரசியல் தலைவர்களும் செய்துவரும் பழைய தவறின் தொடர்ச்சிதான் என்று பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி கூறினார். அரசு பொறுப்பில் இருப்பவர்கள் மதச் சாயம் பூசிக்கொள்ளக்கூடாது என்ற அரசியல் சாசனக் கொள்கையை பல அரசியல் தலைவர்களும் மதித்து நடப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி