சிரியா யுத்தம் பற்றிப் பேச புடின் இரான் செல்கிறார் - தமிழ் இலெமுரியா

24 November 2015 9:57 am

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரானியத் தலைமைத்துவத்துடன் உரையாடுவதற்காக தெஹ்ரான் செல்கிறார். சிரியாவில் நடந்துவரும் யுத்தம் பற்றி இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸத்துக்கு இராணுவ ரீதியில் ஆதரவு வழங்கும் முக்கிய நாடுகள் சிரியாவும் இரானும் ஆகும். இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் ஆயுததாரிகள் உட்பட சிரியாவின் கிளர்ச்சிக்கார்களுக்கு எதிராக கடுமையான விமான குண்டுவீச்சையும் ஏவுகணைத் தாக்குதல்களையும் ரஷ்யா நடத்தி வருகிறது. தரை வழி யுத்தத்தை ஒருங்கிணைப்பதில் சிரியாவின் அரசாங்கத்துக்கு இரான் உதவி வருகிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி