17 February 2015 7:22 pm
சிறிரங்கம் இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி 1,51,561 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். தனக்கு அடுத்ததாக வந்த தி.மு.க. வேட்பாளர் என். ஆனந்தைவிட 96,516 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் என் ஆனந்த் 55,045 வாக்குகளையும் பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் எம். சுப்ரமணியம் 5,015 வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே. அண்ணாதுரை 1552 வாக்குகளையும் பெற்றுள்ளனர். சுயேச்சையாகப் போட்டியிட்டவர்களில் டிராஃபிக் ராமசாமி என்ற சமூக ஆர்வலர் 1167 வாக்குகளை பெற்றுள்ளார். யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைக் குறிக்கும் நோட்டாவுக்கு 1919 வாக்குகள் விழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைவிட அதிக வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் தி.மு.கவைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் டெபாசிட் இழந்துள்ளன.