சீனாவில் விழுந்துபோயுள்ள சுரங்கத்தின் உரிமையாளர் தற்கொலை - தமிழ் இலெமுரியா

28 December 2015 10:05 am

சீனாவின் கிழக்கில் ஷன்டொங் மாகாணத்தில் அண்மையில் விபத்து நடந்த ஒரு ஜிப்சம் சுரங்கத்தின் உரிமையாளர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ளார் என சீனாவின் அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டு நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள பதினேழு பணியாளர்களை சென்றடைய மீட்புக் குழுக்கள் தொடர்ந்தும் முயன்றுவருகின்றனர். வேறு பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கட்டுமானப் பணிகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற பெயரில் பயன்படுத்தப்படும் ஜிப்சம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கம் இது. கடந்த ஓராண்டில் சீனாவில் சுரங்க விபத்துகளில் தொள்ளாயிரம் பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி