8 October 2013 8:29 am
வள்ளுவன் தமிழ்ப் பாடசாலை நிறுவனர் ஆசிரியர் பொ.முருகவேள் எழுதிய சுவிட்சர்லாந்தும், தமிழர் குடியேற்றமும் மற்றும் பூநகரிப் பூங்கா ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்துத் தலைநகர் பேர்னில், தனிநாயக அடிகளார் அரங்கில் திருக்குறள் உலகளாவிய தமிழ் மறை நூல் பரிந்துரை விழாவும், வள்ளுவன் தமிழ்ப் பாடசாலை நிறுவனர் ஆசிரியர் பொ.முருகவேல் எழுதிய சுவிட்சர்லாந்தும், தமிழர் குடியேற்றமும் மற்றும் பூநகரிப் பூங்கா ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிர மணியன் விழாவிற்குத் தலைமை தாங்கி இரு நூல்களையும் வெளியிட்டுள்ளார். சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர் மொரிசீயஸ் கேசவா பக்ரி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவில், இலங்கை பூநகரி பிரதேச சபைத் தலைவர் பொ.சீறிகந்தராசா, எழுத்தாளர் நிமிலன், தமிழ் வழிபாட்டுக் குரு சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நாதசுர இசை மேள தாளங்கள் முழங்க திருவள்ளுவர் படமும் திருக்குறள் நூலும் ஊர்வலமாக மேடைக்குக் கொண்டு வந்து மரியாதை செய்யப்பட்டது.