ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஊழலை விசாரிக்க அதிகாரம் இல்லை: மகிந்த இராசபக்சே - தமிழ் இலெமுரியா

15 October 2015 3:37 pm

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஊழல் மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு ஆணைக்குழு முன்னால் இன்று ஆஜரானார். ஆணைக்குழு பிறப்பித்திருந்த உத்தரவொன்றுக்கு அமையவே, மகிந்த ராஜபல்சே அவரது வழக்கறிஞர்களுடன் அங்கு சமுகமளித்தார். அரச ஊடகமான சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஒளிபரப்பான மகிந்த ராஜபக்சேவின் தேர்தல் பரப்புரை விளம்பரங்களுக்கு பணம் செலுத்தத்தவறிய குற்றச்சாட்டிலேயே பெரும் ஊழல் மோசடிகள் தொடர்பான சிறப்பு ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆணைக்குழு முன்பாக அழைக்கப்பட்டிருந்தார். இன்று விசாரணை துவங்கியபோது, ஆட்சேபணை தெரிவித்த மகிந்த ராஜபக்சேவின் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு அந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் இல்லை என்று வாதிட்டனர்.இதனையடுத்து, விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்திய ஆணைக்குழு, ஆட்சேபணை சம்பந்தமான முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று அறிவித்தது.இதனையடுத்து, ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினர், அரசியல் நோக்கத்துடனேயே மகிந்த ராஜபக்சேவை அரசாங்கம் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னால் அழைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி