28 December 2015 10:03 am
தென் சீனக்கடலில் பூசலுக்குட்பட்ட தீவுகளுக்கு அருகிலுள்ள, தனது கடல் எல்லை என்று ஜப்பான் கருதும் இடத்தில், சீனாவின் கடலோர காவற்படைக் கப்பல் உள்ளிட்ட மூன்று கப்பல்கள் நுழைந்தது தொடர்பில், சீனாவிடம் தனது எதிர்ப்பை ஜப்பான் பதிவு செய்துள்ளது. பூசலுக்குட்பட்ட சென்காகு தீவுகளுக்கு அருகே, துப்பாக்கி மேடைகள் பொருத்தப்பட்ட சீனக்கப்பல் ஒன்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்ததாக, ஜப்பானின் கடலோரக் காவற்படை தெரிவித்துள்ளது. இந்தத் தீவுகளுக்கு அருகே ஜப்பான் கடல்பரப்புக்குள் ஒரு ஆயுதம் தாங்கிய சீனக் கப்பல் நுழைவது இதுவே முதல் முறை என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.