14 January 2017 8:25 pm
பல சர்ச்சைகளுக்கு பின்னர், இந்தியாவின் தொழில்துறை ஜாம்பாவான் டாட்டா சன்ஸ் நிறுவனம் புதிய தலைவரை அறிவித்திருக்கிறது.தற்போது டாட்டா கன்செல்டென்சி சேவைகளின் தலைமை செயலதிகாரியாக இருக்கும் நடராஜன் சந்திரசேகரன், புதிய தலைவராக பொறுப்பை ஏற்கவுள்ளார்.தமிழ் நாட்டின் நாமக்கல் அருகே உள்ள மோகனூரைச் சேரந்தவர் `சந்திரா` என்றழைக்கப்படும் நடராஜன் சந்திரசேகரன். திருச்சி பிராந்தியப் பொறியியல் கல்லூரியில் கணினி மேற்படிப்பு பயின்றவர் சந்திரசேகரன். ரத்தன் டாட்டா ஓய்வு பெறுகிறார்; சைரஸ் மிஸ்த்ரி தலைவரானார்.2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென பதவிலிருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரியின் இடத்தை நடராஜன் சந்திரசேகரன் பிப்ரவரி மாதத்தில் நிரப்பவிருக்கிறார்.டாட்டா குழும நிறுவனங்களை நான்கு ஆண்டுகளாக வழிநடத்திய சைரஸ் மிஸ்திரி, கடந்த டிசம்பர் மாதம் டாட்டா குழுமத்தின் அனைத்து வாரியங்களிலிருந்தும் விலகினார்.ஜாக்குவார்-லேண்ட் ரோவர் வாகனங்கள் மற்றும் டாட்டா ஸ்டீல் முதல் விமானத்துறை மற்றும் உப்பளம் வரையான வர்த்தகப் பேரரசாக, பிற நிறுவனப் பங்குகளை கொண்ட டாட்டா சன்ஸ் நிறுவனம் விளங்குகிறது,தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாட்டா கன்செல்டென்சி (டிசிஎஸ்) இந்தியாவின் 67 பில்லியன் டாலர் (55 பில்லியன் யூரோ) சந்தை முதலீட்டோடு, மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனமாக வலம் வருகிறது. 1987 ஆம் ஆண்டு டாட்டாவில் இணைந்த சந்திரசேகரன் 2009 ஆம் ஆண்டு டிசிஎஸின் தலைமை செயலதிகாரியாக பணியேற்றார்.டாடா குழுமம் பெரும் இழப்பை சந்திப்பதாக சைரஸ் மிஸ்திரி எழுதிய கடிதம்"டாட்டாவில் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்" என இவரை இந்த டாட்டா வாரியம் புகழ்ந்திருக்கிறது. இந்த குழுமத்தின் தேர்வு குழுவினர் அனைவராலும் ஒரு மனதாக இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட நடராஜன் சந்திரசேகரன் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி டாட்டா குழும நிறுவனங்களின் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்பார் என்று இந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.