18 November 2016 5:30 pm
தன்னுடைய தண்டுவடத்தை மீளுருவாக்கி கொள்ளும் திறனுடைய மீன்களின் ஓரினம், முடமாகும் மனிதர்களை மீண்டும் நடக்க வைப்பதற்கு முக்கியமாக உதவலாம் என்று அமெரிக்காவின் அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.வரிக்குதிரை மீன் அதனுடைய தண்டுவடம் துண்டிக்கப்பட்டுவிட்டால் இரண்டு முனைகளை இணைக்கும் வகையில், இணைக்கின்ற திசு வளர்ச்சி அம்சம்-ஏ எனப்படும் ஒரு வகை புரதத்தை பயன்படுத்துகிறது. 90 சதவீதம் அதே புரதத்தின் சாயல் கொண்ட புரதப் பதிப்பைத்தான் மனிதரும் கொண்டுள்ளனர்.நம்முடைய தண்டுவடத்தை மீளுருவாக்கி கொள்ள முடியாத நிலையில், வரிக்குதிரை மீன்களில் தண்டுவடத்தை மீளுவாக்கி கொள்வதில் இந்த புரதம் செயலாற்றுகிறது,இது எவ்வாறு சாத்தியமாகிறது என்பது பற்றி இந்த ஆய்வாளர்கள் குழு சோதனை மேற்கொண்டு வருகிறது. வடுக்களின் திசு உருவாகுவது, பாலூட்டிகளில் குணமாதல் சிக்கலான விடயமாக இருப்பதற்கு ஒரு காரணமாகும்.