தமிழ்நாடு தேர்தல்: திமுக-காங்கிரசு கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்தது - தமிழ் இலெமுரியா

16 February 2016 11:50 pm

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்துள்ளது.தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படும் சூழலில், அரசியல் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளும் தொடர்ந்து வெளிவர தொடங்கியுள்ளன.திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியில் தமது கட்சியும் இணைகிறது என்பதை முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொஹைதீன் திங்கட்கிழமை செய்தியாளர்களிடன் உறுதி செய்தார்.திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்து பேசிய காதர் மொஹைதீன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மதசார்பற்ற வலுவான கூட்டணி உருவாகி வருவதாகவும், சனநாயகம், சமுக நீதி கொள்கைகள் போன்ற மக்களுக்கு நன்மை வழங்க கூடிய கொள்கைகளை கொண்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி