தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தப்பாட்டம் என்ற இசை நிகழ்ச்சியை பொது நிகழ்வுகளில் நடத்த போலிசார் விதித்த தடை குறித்து தமிழகத்தில் சர்ச்சை எழுந்திருக்கிறது. - தமிழ் இலெமுரியா

17 October 2014 1:30 am

தப்பாட்டம் , பறை இசை என்றெல்லாம் வழங்கப்படும் இந்த இசை வடிவம் தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டிலிருந்து சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறது.தலித் சமுகத்தின் ஒரு பிரிவினரால் , கோவில் விழாக்கள் மற்றும் குடும்ப மங்கல மற்றும் அமங்கல நிகழ்வுகளின்போது , இசைக்கப்படும் இந்த இசை மற்றும் இசையுடன் கூடிய ஒருவித களியாட்ட நடனம் , அந்த சமூகத்தினரின் ஒரு பகுதியினரால், தங்களது ஒடுக்கப்பட்ட நிலையை நினைவூட்டுவதாக்கக் கூறி, இதை தலித் மக்கள் இசைக்கக் கூடாது என்று கூறி வந்திருக்கின்றனர். சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போலிசார் இந்த இசையை பொது நிகழ்ச்சிகளில் இசைப்பதற்கு விதித்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்த இசை தொடர்பான சர்ச்சை மீண்டும் பொது தளத்துக்கு வந்திருக்கிறது ஆனால் இதன் சாதிய வரலாற்று பின் புலம் காரணமாக இதை இசைப்பதை ஒட்டு மொத்தமாகவே தடைசெய்யவேண்டும் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி