தமிழ்நாட்டில் விற்கப்படும் கணினிகள், கைப்பேசிகள் மற்றும் நவீன கேளிக்கை உபகரணங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதியை தயாராக செய்து வைத்திருக்க வேண்டும் - தமிழ் இலெமுரியா

12 March 2014 5:20 am

தமிழ்நாட்டில் விற்கப்படும் கணினிகள், கைப்பேசிகள் மற்றும் நவீன கேளிக்கை உபகரணங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதியை தயாராக செய்துவைத்திருக்க வேண்டும் என இக்கருவிகளையும் மென்பொருட்களையும் உற்பத்திசெய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிபந்தனையிட்டு சட்டம் கொண்டுவ ர வேண்டும் என தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அவ்விதமாக மாநில அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தால்தான், தமிழ் எழுத்துருக்களும், தமிழ் உள்ளீடு முறைகளும் அனைத்து நவீன கருவிகளிலும் இடம் பெறுகின்ற சூழ்நிலை உருவாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிங்கப்பூர் அரசாங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே தமது நூலகங்களில் உள்ள அனைத்து கருவிகளிலும் தமிழும் இடம் பெற வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததால்தான், ஆப்பிள் நிறுவனம் தனது மேக்கிண்டோஷ் கணினிகளில் தமிழைப் பயன்படுத்த வழியேற்படுத்தித் தந்தது என உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தினுடைய இந்தியக் கிளையின் தலைவர் மணிவண்ணன் தெரிவித்தார். தாய்லாந்து, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளும் கூட தமது நாடுகளில் விற்கப்படும் கருவிகளில் தமது மொழிக்கான வசதி இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதால் அம்மொழி பேசும் மக்களுக்கு நவீன கருவிகளில் தமது தாய்மொழியைப் புழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என மணிவண்ணன் குறிப்பிட்டார். நவீன கருவிகளிலும் மென் பொருட்களிலும் தமிழைப் பயன்படுத்தும் வசதியை செய்து கொடுப்பதில் தொழில் நுட்பப் பிரச்சினைகள் இல்லை என்றும், ஆனால் அவ்வாறான கோரிக்கைகளும் சட்டங்களும் இல்லை என்பதாலேயே கருவி உற்பத்தி நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி