தற்கொலைத் தலைநகராகிறதா சென்னை? - தமிழ் இலெமுரியா

22 July 2015 3:40 pm

இந்தியாவில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பல்தரப்பில் கவலைகள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக நகரங்களைப் பொருத்தவரை, சென்னையிலேயே கூடுதலான தற்கொலைகள் நிகழ்கின்றன என தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்கள் காட்டுகின்றன. இந்திய அளவில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமாக தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று அந்தக் காப்பகத்தின் 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கை கூறுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு தமிழகத்தில் 16,122 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும், சென்னையில் மட்டும் 2450 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூடுதலான தற்கொலைகள் ஏற்படுவதற்கு, மதுக்கடைகள் ஒரு முக்கியமான காரணமாக இருந்துள்ளன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மதுக்கடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் தெரிவித்தார், மனநல மருத்துவரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்களை அந்த உணர்விலிருந்து மீள்வதற்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ’ஸ்நேகா அமைப்பின்’ நிறுவன இயக்குநர் டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். பெண்களிடையே இளம் வயதில் தற்கொலை முயற்சிகள் கூடுதலாக உள்ளன, அவர்களின் உடல் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் மன வளர்ச்சி ஏற்படாதது அடிப்படைக் காரணங்களில் ஒன்று எனவும் டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார் தெரிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி