தாஜ்மகால் இந்துக் கோயில் அல்ல – இந்திய அரசு - தமிழ் இலெமுரியா

2 December 2015 10:09 am

இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ் மஹால் ஒரு இந்துக் கோவில் என கூறப்படுவதை இந்திய அரசு மறுத்துள்ளது. அந்த இடம் ஒரு கோவில்தான் என்று நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆக்ராவைச் சேர்ந்த ஆறு வழக்கறிஞர்கள் தாஜ் மஹால் அமைந்திருக்கும் இடம் உண்மையில் சிவன் கோவிலாக இருந்தது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். இதனால், அதனை ஹிந்து கோவில் என அறிவிக்க வேண்டுமென அவர்கள் கோரினர். 17ஆம் நூற்றாண்டில் ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்மஹாலுக்கு தினம்தோறும் 12,000 பேர் வரை வருகின்றனர். ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலின் நினைவாக கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம், 1653ல் கட்டிமுடிக்கப்பட்டது. 1983ல் தாஜ்மஹால் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி