தாய்வான் கடும்பனியில் 50 பேர் பலி - தமிழ் இலெமுரியா

26 January 2016 9:56 am

அமெரிக்காவை பனிப்புயல் ஒருபுறம் தாக்கியிருக்க மறுபுறம் தென்கிழக்காசியாவில் தாய்வான் நாட்டையும் எதிர்பாராத கடும்பனி தாக்கியுள்ளது. 16 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறையவே அதனால், 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். வழமையாக மிதமான குளிருடன் கூடிய காலநிலையைக் கொண்ட தாய்வானில், திடீரென அதீத குளிர் தாக்கியதில், வெப்பமூட்டிகளின் வசதி இல்லாமல் வாழ்ந்த பெரும்பாலும் முதியவர்களே இறந்தவர்களில் அதிகமாகும். சீனா மற்றும் ஜப்பான் உட்பட தென்கிழக்காசியாவின் பெரும்பாலான நாடுகள் கடுமையான குளிரை எதிர்கொள்ள தடுமாறுகின்றன. தென்கொரியாவில் ஜெஜு விடுமுறைக்கால சுற்றுலா தலத்தில், பெரும் பனிப்பொழிவு காரணமாக 90,000 சுற்றுலாபயணிகள் அகப்பட்டுள்ளனர். விமாநிலையம் மூடப்பட்டுள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி