தினகரன் அவுட்! அதிமுக துணை பொதுச்செயலாளராகிறார் விவேக்? சசிகலா முடிவு - தமிழ் இலெமுரியா

30 April 2017 5:38 pm

சசிகலாவால் அதிமுக துணை பொதுச்செயாலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் கைதானதால் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனை துணை பொதுச்செயலாளராக நியமிக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்ற சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலாவால் அதிமுக துணை பொதுச்செயாலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனை துணை பொதுச்செயலாளராக நியமிக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி