திபெத்துக்கு மேலும் சுயாட்சிக்கான புதிய பரப்புரை - தமிழ் இலெமுரியா

7 June 2014 1:58 am

சீனாவின் ஆளுகைக்குள் இருக்கும் திபெத்திய மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கு மேலும் கூடுதல் சுயாட்சி அதிகாரங்களை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு உலக மக்களின் ஆதரவைத் திரட்ட புதிய பிரசார முயற்சி ஒன்றை நாடுகடந்த திபெத்திய அரசு தொடங்கியிருக்கிறது.திபெத்திய நாடுகடந்த அரசின் கொள்கையான, "மைய வழி" என்ற கொள்கையைப் பற்றி சீன அரசு நடத்தி வரும் பொய்ப்பிரசார முயற்சியை முறியடிப்பதற்காக இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டிருப்பதாகத் திபெத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களது இந்த "மைய வழிக்" கொள்கை, திபெத்துக்கு உண்மையான சுயாட்சியைக் கோருகிறது, சீனாவிடமிருந்து சுதந்திரத்தை அல்ல .சீனாவின் கட்டுப்பாட்டில் 1950களிலிருந்து இருந்து வரும் திபெத் மாகாணத்தில் தற்போது முழுமையான ஒடுக்குமுறை நிலவிவருவதாக, இந்தியாவின் தரம்சாலாவிலிருந்து இயங்கும் நாடுகடந்த திபெத் அரசு கூறியது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி