7 June 2014 1:53 am
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியைச் சந்தித்ததையடுத்து, அந்தத் தோல்வி குறித்து விவாதிக்க கடந்த ஜூன் இரண்டாம் தேதியன்று, தி.மு.கவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமையாக்குவதற்கும், மேலும் வலிமைப்படுத்துவதற்கும், ஏற்ற வகையில் தேவையான சாத்தியக்கூறுகளை ஆய்ந்து முடிவெடுக்கவும், கழகத் தலைமைக்குப் பரிந்துரை செய்யவும் குழு அமைக்கப்படும் என்றும் அந்தக் குழுவின் பரிந்துரைகள் மீது தலைமைக் கழகம் முடிவெடுத்து அதனையொட்டி முறைப்படி கழகத்தின் அமைப்பு விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,· முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,· வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்,· பெ.சு. திருவேங்கடம்,· திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த டி.எஸ். கல்யாணசுந்தரம்,· இரா. ராஜமாணிக்கம்,· எஸ்.எல்.டி. சச்சிதானந்தம்ஆகியோரைக் கொண்ட குழுவை தி.மு.க. அமைத்துள்ளது.