திருச்சி அருகே கோர விபத்து: குறைந்தது 9 பேர் பலி - தமிழ் இலெமுரியா

21 October 2015 10:21 am

தமிழ்நாட்டில் திருச்சி அருகே நெடுஞ்சாலையில் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதியதில் குறைந்தது 9 பேர் பலியாகியுள்ளனர். சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து ஒன்று திருச்சி அருகே சாலை ஓரமாக இரும்புத் தகடுகளை எற்றியபடி நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியது. செவ்வாய்க்கிழமை இரவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பேருந்து மோதிய வேகத்தில் அதன் ஒரு பகுதி முழுவதும் இரும்புத் தகடால் கிழித்துச் செல்லப்பட்டது. இதனால், அந்த பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி