தில்லி முதல்வர் அலுவலகத்தில் திடீர் சோதனை: மோடி மீது குற்றச்சாட்டு - தமிழ் இலெமுரியா

16 December 2015 9:50 am

தில்லியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், தனது அலுவலகத்தில் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிரான கட்சி என்று தம்மை அழைத்துக்கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், அரசியல் நோக்கத்துடன் தான் இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், நரேந்திர மோடியை "ஒரு கோழை" என்றும் "ஒரு மனநோயாளி" என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வர்ணித்துள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியாவின் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் மறுத்துள்ளனர். கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியர் மீது விசாரணை நடத்திவருவதாகவும், இதில் கெஜ்ரிவால் இலக்கு வைக்கப்படவில்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியைக் குறை சொல்வது என்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழக்கமாகிவிட்டது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் தில்லி முதலமைச்சராக பதவியேற்ற கெஜ்ரிவாலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்தும் மோதல்போக்கே இருந்துவருகின்றது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி