2 January 2016 10:36 am
துபாயிலுள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து இருபது மணி நேரத்துக்கு பிறகு பெருமளவில் அணைக்கப்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஆங்காங்கே சிற்சில இடங்களில் தீ எரிவதை காண முடிகிறது என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். அட்ரஸ் டவுண்டவுன் ஹோட்டல் எனப்படும் அந்த 63 மாடி கட்டிடத்தில், புத்தாண்டு வரவை கொண்டாடும் நிகழ்ச்சிகளும் வானவேடிக்கைகளும் நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்னர் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் இந்த தீ விபத்தின் செய்திகள் பெரிய அளவில் வெளியுலகுக்கு தெரியவராமல் தடுக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அது துபாயின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என்பதால் மூன்று மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த தீ விபத்து, அது ஏற்பட்ட பிறகு அங்கு சூழல் எப்படி நிலவியது போன்றவை குறித்து, விபத்து நடத்த கட்டிடத்துக்கு அருகில் இருந்த பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் பேசினார்.