துருக்கிய கடற்கரையில் குடியேறிகளின் சடலங்கள் - தமிழ் இலெமுரியா

6 January 2016 3:23 pm

துருக்கியின் ஏகியேன் கடற்கரையில் குறைந்தது 34 குடியேறிகளின் உடல்கள் கரையொதிங்கியுள்ளதாக துருக்கிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் பல சிறார்களும் அடங்குவர் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தக் குடியேறிகள் இரண்டு தனித்தனி படகுகளில் கிரேக்கத் தீவான லெஸ்போஸை அடைய முயற்சித்த போது, மோசமான வானிலை காரணமாக அந்தப் படகுகள் கவிழ்ந்தன என துருக்கிய ஊடகங்கள் கூறுகின்றன. துருக்கிய நகர்களாக அய்வலெக் மற்றும் டிக்கிலி நகரங்களுக்கு அருகே அவர்களின் உடல்கள் கிடைத்தன என்று கூறப்படுகிறது. கொந்தளிப்பான கடல் ஒன்றின் மணற்பாங்கான கடற்கரையில் ஒதுங்கியுள்ள அந்தக் குடியேறிகளின் சடலங்கள் அனைத்திலும், அவர்கள் பாதுகாப்பு மிதவை கவசமும், காலணிகளும் அணிந்திருப்பது, புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளில் தெரிகின்றன. மேலும் சிலரைத் தாங்கள் தொடர்ந்து தேடி வருவதாக துருக்கியின் கடலோரக் காவல்படையினரும், காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று நாட்களில் மட்டும் 5000க்கும் அதிகமான குடியேறிகள் கடல் வழியாக கிரேக்கத்தை வந்தடைந்துள்ளனர் என்று குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு கூறுகிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி