தெலங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்கான சட்டவரைவை -ஆந்திரப்பிரதேச மாநில சட்டசபை நிராகரித்துள்ளது. - தமிழ் இலெமுரியா

1 February 2014 11:46 pm

ஆந்திராவைப் பிரித்து, புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கு எதிராக மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய மாநிலத்துக்கு அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.3 கோடியே 50 லட்சம் மக்களைக் கொண்ட தெலங்கானா பகுதி, ஆந்திரப்பிரதேசத்தின் 23 மாவட்டங்களில் 10 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். ஐதராபாத்தும் அதில் அடங்குகிறது. இந்தியாவின் 29வது மாநிலமாக வரக்கூடிய இந்த மாநிலத்தை உருவாக்குவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அண்மைக்காலமாக அதிக போராட்டங்கள் அங்கு நடந்துள்ளன.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி