தெலுங்கானா விவகாரம், தமிழக மீனவர் பிரச்சினை இந்திய நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம். - தமிழ் இலெமுரியா

11 February 2014 10:59 pm

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, தெலங்கானா, தமிழக மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தொடர்பாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. வருகிற மே மாதத்துடன் நடப்பு நாடாளுமன்ற மக்களவையின் பதவி காலம் முடிவடைகிறது.  இந்த நிலையில் 15வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் கடந்த 5ம் தேதி தொடங்கியது. மக்களவை இன்று காலை கூடியவுடன் தமிழக மீனவர் பிரச்னையை எழுப்பியும், தெலங்கானா தனி மாநில உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடிய போதும் அமளி நீடித்ததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் மீராகுமார் உத்தரவிட்டார். மக்களவை தொடர்ந்து 5-வது நாளாக முடங்கியது.  இதே போல் மாநிலங்களவையிலும், கடும் அமளி நீடித்தது. அவை கூடியவுடன் தெலங்கானா விவகாரம் எதிரொலித்தது. முதலில் 11.11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது, தமிழக மீனவர்கள் பிரச்சினையை முன்வைத்து அதிமுக எம்.பி. மைத்ரேயன், அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு சத்தம் போட்டனர். 

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி