தொழிலாளியைக் கொன்ற கேரள முதலாளிக்கு ஆயுள் தண்டனை - தமிழ் இலெமுரியா

23 January 2016 10:47 am

கேரளாவிலுள்ள கோடீஸ்வர வியாபாரி ஒருவர் தனது பாதுகாப்பு பணியாளர் ஒருவர் மீது காரை ஏற்றிக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். மொஹமத் நிஷாம் எனும் 38 வயதான அந்தக் கோடீஸ்வரர், 55 வயதான பாதுகாப்பு ஊழியர் சந்திரபோஸை காரால் தள்ளிச் சென்று சுவற்றில் மோதிய பிறகு, அவரை உலோகத் தடியாலும் அடித்துள்ளார். இத்தாக்குதல் நடைபெற்று இரண்டு வாரங்களுக்கு பிறகு சந்திரபோஸ் உயிரிழந்தார். முதலாளியான நிஷாம் உள்ளே நுழையும்போது, சந்திரபோஸ் வாயிற்கதவை மெதுவாகத் திறந்தார் எனும் கோபத்தின் காரணமாக அவரை காரால் தள்ளி பிறகு தடியால் அடித்துக் கொன்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார். இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் எப்படி அகம்பாவத்துடன் அகராதித்தனமாக நடக்கின்றனர் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சான்று என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி