நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு – ஐநா உறுதி! - தமிழ் இலெமுரியா

8 September 2013 3:48 am

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு கருத்து வெளியிட்ட காரணத்திற்காக எவரும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சகல மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பணிகளும் மதிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். நவனீதம் பிள்ளையினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். 

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி