10 December 2013 11:02 pm
இந்தியாவில் தலைநகர் தில்லி உட்பட ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் நாட்டின் முக்கிய எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ள பா.ஜ.க, தில்லியில் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ள கட்சியாக வந்துள்ளது. ராஜஸ்தானில் அக்கட்சி காங்கிரசிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒரு மனோநிலை வளர்ந்துள்ளதையே காட்டுவதாக பா.ஜ.க பேச்சாளர் நிர்மலா சீதாராமன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களிலும், இதேபோன்ற ஒரு சூழல் இருக்குமென்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகளை ஒன்று திரட்டுவதில் தமது கட்சியின் பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடி முனைந்துள்ளார் எனவும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.