நெல்சன் மண்டேலாவுக்கு ‘மனிதநேய சாதனையாளர் விருது’ - தமிழ் இலெமுரியா

25 September 2013 12:09 am

தென்பிராந்திய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியதற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நுரையீரல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 95 வயதான தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா. மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் வீடு திரும்பிய நெல்சன் மண்டேலா தற்போது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு "மனிதநேய சாதனையாளர் விருது" வழங்கப்பட்டுள்ளது.  நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில் இவ்விருதை நெல்சன் மண்டேலா சார்பில் அவரது மகள்கள் ஜின்ட்ஜி மண்டேலா மற்றும் ஜோசினா மாசெல் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். 

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி