பல்கலைக்கழகத் தாக்குதல்கள்:பாகிஸ்தானில் தேசியத் துக்கம் - தமிழ் இலெமுரியா

21 January 2016 4:49 pm

பாகிஸ்தானின் வடமேற்கே பச்சா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக இன்று தேசியத் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நேற்று-புதன்கிழமை பச்சா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் நினைவாக இன்று விழிப்புணர்வும் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. இந்தப் படுகொலைகளை செய்தவர்களை கண்டுபிடிப்பதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தானிய இராணுவப் பேச்சாளர் கூறுகிறார். எனினும் அவர்கள் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் இத்தாக்குதலுக்கு தாலிபான்கள் உரிமை கோரியுள்ளனர். கல்விக்கூடங்கள் போன்ற இராணுவம் சாரா இடங்கள் மீது ஏன் தீவிரவாதிகள் இப்படியானத் தாக்குதல்களை நடத்தினர் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. பெஷாவர் நகரில் இதேபோன்று ஒரு பாடசாலையில் நடைபெற்ற தாக்குதலில் முன்னர் 130 மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி